Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம்

அரசபேருந்துக்கள் இனி மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் அதிகாரி உறுதி!

பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் செல்லும் விவகாரம் தொடர்பில்  இனிவரும் காலங்களில்  இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறாது என மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட  இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண பதில்  பிராந்திய முகாமையாளர் (செயலாற்றல்) அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்

இது விடயமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் கிழவன்குளம் திருமுறுகண்டி  பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ_ 9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது செல்வதால் பாடசாலை செல்லவும் மீண்டும் பாடசாலையில் இருந்து வீடு வரவும் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவும் பல்வேறு தரப்பினருக்கும்  தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என  ஊடகங்களில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டது

இந்நிலையில் 13.03.2023 அன்று ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டது

இந்நிலையில் 15.03.2023 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண பிரதான பிராந்திய முகாமையாளர் அவர்களிடம் குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு எழுத்துமூலம்  கோரியிருந்தது  

இந்நிலையில்  இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராத்திய முகாமையாளர் (செயலற்றால் ) அவர்களால் உரிய நடவடிக்கை எடுத்து யாழ்ப்பானம், பருத்தித்துறை, காரைநகர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா சாலை முகாமையாளிகளுக்கு உரிய அறியுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் பிரதி  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அவ்வறிக்கையின் பிரகாரம் கடந்த 2022-11-14 ஆம் திகதி மற்றும் 2022-09-19 திகதிகளில் இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் பகுதித்துறை, காரைநகர், கிளிநொச்சி, முல்லைத்தீவு. மன்னார் மற்றும் வவுனியா ஆகிய சாலைகளின் முகாமையாளர்களிற்கு தெரியப்படுத்தி இருந்தும்  அவர்கள்  பாடசாலை மாணவர்களிற்கு முன்னுரிமை வழங்கப்படாமை  தெரியவருதாகவும் பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவு நேரங்களில் செயலாற்றும் பேருந்துகள் பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி ஏற்றியிறக்குமாறும்  பேருந்து குழுவினருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாரான முறைப்பாடுகள் கிடைக்கும் இடத்து சம்மந்தப்பட்ட  பேருந்து குழுவிற்கு எதிராக சபை  விதிமுறைகளின்படி  கடும்  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இலங்கை போக்குவரத்துச் சபையிநின்  (வடக்கு) பிராந்திய முகாமையாளரால் (செயலாற்றல் ) வட  மாகாணத்தில் இயங்கும் சகல சாலை  முகாமையாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.என தெரிவித்துள்ளதாக 29.03.2023 அன்று  இலங்கை  மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடகங்களுக்கு  அறிவித்திருந்தனர்

இந்த அறிவித்தல்களின் பின்னரும் மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் செல்லும் நிலை தொடர்ந்து வந்த நிலையில் இந்த விடயங்கள் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டதை தொடந்து இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண பிரதான  பிராந்திய முகாமையாளர் அவர்கள் இன்று இலங்கை  மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாண அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்

இன்று காலை இலங்கை  மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாண அலுவலகத்துக்கு சென்று வந்த பின்னர் இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண பதில்  பிராந்திய முகாமையாளர் (செயலாற்றல்) அவர்கள் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்

இன்று பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் ஏற்றாமை  தொடர்பில்  இலங்கை  மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வருகை தந்து இந்த விடயம் தொடர்பான விளக்கத்தை வழங்கினோம். பாடசாலை மாணவர்களை ஏற்றவேண்டியது கட்டாயம் என்பதனால் அவர்களை  கட்டாயம் ஏற்றவேண்டும்.  வடமாகாணத்துக்கு உட்பட்ட  சகல சாலை முகாமையாளர்களுக்கும் ஏக்கனவே உரிய அறிவுறுத்தல்கள்  வழங்கியுள்ளோம். அதைவிட வெளி மாகாணங்களில் இருந்து வருகின்ற பேருந்துகள் ஏற்றவேண்டும் என சம்மந்தப்பட்ட பேருந்துகளின் பிராந்தியத்துக்கு பொறுப்பானவர்களுக்கு அறிவித்திருந்த போதும் சில பேருந்துகள் மாணவர்களை ஏற்றாது செல்வது தொடர்பில் முறைப்பாடுகள் தொடர்ந்து கிடைத்தவண்ணமிருந்தது நேற்றைய தினம் நாங்கள் நேரடியாக சென்று  பேருந்துகள் ஏற்றாது செல்வது தொடர்பாக பார்வையிட்டு அறிக்கைகளை தயாரித்துள்ளோம்.

அங்கு மாணவர்களை ஏற்றாது சென்ற பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான கொழும்பு பேருந்துக்கு சாலை முகாமையாளருக்கு அறிவித்து நடவடிக்கை எடுத்துள்ளோம் இதேபோல் வெளி மாகாண  பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை தலைவருக்கு அறிவித்து அவர்களுக்கும்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ஆகவே இனிவரும் காலங்களில்  இவ்வாறான செயற்பாடுகள்இடம் பெறாது உரிய  நடவடிக்கைகள் நாங்கள் மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *