Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவில் இல்மனைட் அகழ்வுக்கு எதிர்ப்பு -அனுமதி மறுப்பு!

முல்லைத்தீவு மாவட்டத் தில் செம்மலை தொடக்கம், கொக்கிளாய் வரையான கடற்கரையோரத்தில் இல்மனைட் அகழ்வதற்கு நாடா ளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவி ருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரப் பட்ட நிலையில் நாடாளு மன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இல்மனைட் அகழ்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார். 

இதனை அடுத்து குறித்த அனும தியை ஒருங்கிணைப்புக் குழு நிராகரிப்பதாகத் தீர்மா னித்துள்ளது.முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப் புக் குழுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(16-02-24) இடம்பெற்றபோதே குறித்த இல்மனைட் அகழ்விற்கான அனுமதி கோரப்பட்டது.

இவ்வாறு செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரையில் இல்மனைட் அகழ்ந்தால் அருகே உள்ள வயல் நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் செம்மலைப் பகு தியில் அமைக்கப்பட்டுள்ள உவர் நீர்த் தடுப்பணையும் சேதமடையும். பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்புக்களும் இருப்பதாக இதன்போது சாள்ஸ் நிர்மலநாதனால் சுட் டிக் காட்டப்பட்டது.

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு அனுமதி வழங்காத விட யத்தை, மத்திய அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாதெனவும், செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரை இல்மனைட் அகழ் வதற்கு ஒருபோதும் அனு மதிக்க முடியாதெனவும் கடு மையான எதிர்ப்பை வெளியிட்டார்.

இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத் திக்குழு இந்த அனுமதிக் கோரிக்கையை நிராகரிப்ப தாக முடிவெடுத்ததுடன், இல்மனைட் அகழ்வால் ஏற் படும் பாதிப்பு நிலையைச் சுட்டிக்காட்டி உரியவர்களுக் குஅறிக்கை அனுப்புவதெ னவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *