Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

கச்சைதீவைக் கோருவது ஏற்புடையதல்ல மஸ்தான்!

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்ப ரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி யில் ஈடுபடுவதால், இலங்கை மீனவர்கள் பெரிதும் பாதிப்புக் கள்ளாகின்றார்கள், எனவே இலங்கை மீனவர்களின் பாதிப்பு நிலை உணர்ந்து இந்திய மீனவர்கள் செயற்பட வேண்டுமென  இராஜாங்க அமைச்சரும் வன்னிமாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கைக் கடற்பரப்பினுள் இந்திய மீன வர்கள் அத்துமீறி நுழையும் போது அவர்களுக்கெதிராக ச ட்ட நடவடிக்கை எடுத்தால், அதற்காக அவர்கள் கச்சதீவி க் கோருவது ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக இலங்கைக் கடற்பரப்பினுள் நுழையும் இந்திய இழுவைப் படகுகளை, இலங்கைக் கடற் படையினர் கைதுசெய்து அவர் களுக்கெதிராக சட்டநடவடிக் கைகளும் எடுக்கப்பட்டன.

இந் நிலையில் தமிழ் நாட்டிலும், இந்திய பாரா ளுமன்றிலும், இந்திய மீன வர்களின் கைதுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட் டதுடன், கச்சதீவினை மீளக் கோரும் கருத்துக்களும் வலுப்பெற்றிருந்தன. இது தொடர்பில் வன்னிமா வட்டப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத் துத் தெரிவிக்கையில், இது இரண்டு நாடு களுக்கிடையிலான பிரச்சினையாகும். இருந்தாலும் இரு நாடுகளும் ஒற்றுமையாகச் செயற்பட்டு இந்தப் பிரச்சினைக்குரியதீர்வைக்காணவேண்டும். அயல் நாடான இந்தியாவும், எமதுநாடும் சகோதர்களைப் போன்றது.

எமதுநாடு இளைய சகோதரன் எனில், இந்தியா எமக்கு மூத்த சகோதரரைப் போன்றது. இவ்வாறிருக்கும் போது சில பிரச்சினைகள் ஏற் படும். அதற்காக இவ்வாறான கருத்துக்களை மூத்த சகோதரர் கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய மீனவர்கள் இவ்வாறு இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவதால் இலங்கை மீனவர்கள் பெரும்பாதிப்புக்குள்ளாகின்றனர்.குறிப்பாக தமிழ்நாட்டையும்,எம்மையும் எடுத்துக்கொண்டால் நாம் மொழியாலும்ஒன்றுபட்டவர்களாகக் காணப்படுகின்றோம்.

 அந்த அடிப்படையில் உண்மைத் தன்மையை உணர்ந்து எமது மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு இந்திய மீனவச் சகோதரர்களும் இதனைப் புரிந்து கொண்டு செயற்படவேண்டும். தொடர்ந்தும் இணக்கமாக நாமும் இந்தியாவும் சகோதரப் பாசத்துடன் செயற்படும்வகையில் அவர்களுடைய கருத்துக்களும்இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *