தமிழர்களின் அரசியல் வாதிகளே குருந்தூர்மலைக்கு எதிர்பினை வெளியிடுகின்றார்கள் அங்குள்ள தமிழ்மக்கள் எங்களை வரவேற்கின்றார்கள் எங்களுடன் கதைக்கின்றார்கள் என்ற பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில குருந்தூர்மலையில் வைத்து தெரிவித்துள்ளார்
21.06.23 அன்று குருந்தூர்மலைக்கு பயணம் மேற்கொண்டு அங்கு பூசை வழிபாடுகளை மேற்கொண்டுவிட்டு அதன் பின்னர் ஊடகங்களுக்கு குருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் வாதிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் கடுமையான வித்தியாசம் இங்கு வந்து பார்க்கும் போது தெரிகின்றது கொழும்பில் இருந்து வடக்கிற்கு வந்து தமிழ்மக்கள் மத்தியில் இனவாதத்தினை தூண்ட முற்படுத்தும் அரசியல் வாதிகளை தமிழ்மக்கள் நிராகரப்பதை நாங்கள் பார்த்துள்ளோம் இன்று நாம் அதனை கண்டுள்ளோம்.
முல்லைத்தீவில் உள்ள முன்னால் மாகாணசபை உசை உறுப்பினர் து.ரவிகரனின் ஏற்பாட்டில் 26 பேர் இங்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு நாங்கள் வருவதற்கு முன்னர் சென்று விட்டார்கள். ஆனால் இந்த பகுதியில் விவசாயம் செய்துகொண்டிருந்த மக்கள் எங்களை அன்பாக வரவேற்றார்கள் அவர்களின் குறைகளை எங்களிடம் முன்வைத்தார்கள். அவர்கள் எங்களுடன் மோதலுக்கு வரவில்லை அவர்கள் நிலம்தொல்பொருள் மதிப்புடையதாக இருந்தால் அவர்கள் விவசாயத்தினை வேறு இடத்தில் செய்யவேண்டும்
அப்பாவி தமிழ்மக்களை வைத்து கோயிலை கையாளவும்,அவர்கள் பிரச்சினைகளை தீர்க்கவும் அவர்கள் தமிழ் அரசியல் வாதிகளிடம் இருந்து விலகி இருக்கவேண்டும்
குருந்தி என்பது அனுராதபுர காலத்தில் பிராந்தி நகரம் ஒரு பெரிய குடியேற்றம் இதில் தொல்பொருள் இடிபாடுகள் இந்த பகுதிமுழுவதும்பரவியுள்ளது.
எனவே நாட்டின் எந்த நிலத்திலும் மக்கள் நெற்பயிரினை பயிரிட அனுமதி உண்டு அதனால் உலக பாரம்பரியத்தினை அழிக்கமுடியாது பிரிவினை வாதிகளால் கைப்பற்றப்பட்ட இந்த இடத்தினை எமது நாட்டின் தலைவரால் காப்பாற்ற முடியும் நாட்டின் அரசாங்கத்தினால் நாங்கள் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முடியும் இது இலங்கையில் ஒரோ ஒரு இடமாக காணப்படும் பௌத்த அடையாள சின்னம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.