வற்றாப்பளை கண்ணகி அம்மன்-8 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கான அறிவிப்பு!


வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வாக்காளர்களை பதிவு செய்தல் தொடர்பானது.மாவட்டச் செயலகத்தில் 15.06.2023 ம் திகதி நடை பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட மேற்படி விடயம் கொண்ட தீர்மானம் தொடர்பானது.

அருள்மிகு வற்றாப் பளைக் கண்ணகி அம்மன் ஆலய பரிபலான சபையின் யாப்பு என அழைக்கப்படும் உறுதியின் 3 ஆம் பகுதியில் குறிப்பிடப்பட்டதற்கு இணங்க கீழ் குறிப்பிடப்படும் கிராமங்களில் அங்கத்தவர் தெரிவு இடம்பெறல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

01. வற்றப்பாளை
02. முள்ளியவளை
03. தண்ணீரூற்று
04.குமுழமுனை
05. செம்மலை, அளம்பில்
06. சிலாவத்தை
07. முல்லைத்தீவு பட் டணம்
08. முள்ளிவாய்க்கால்

அதற்கமைவாக குறித்த கிராமங்களைச் சேர்ந்த 21 வயதுக்கு மேற்பட்ட இந்து மத அனுஷ்டானாங்களை
பின்பற்றும் நற்பழக்கமுள்ள ஒரு நபர் ரூபா 10.00 ஆலய அலுவலகத்தில் நேரடியாகச் செலுத்துவதன் மூலம் தன்னை ஒரு வாக்காளராக பதிவு செய்து கொள்ள முடியும்.

16.06.2023 ஆம் திகதியிலிருந்து எதிர் வரும் 01.07.2023 ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை ஆலய அலுவலகம் திறந்திருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன், மேற்படி கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு தகவலைதெரியப் படுத்துமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *