முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர் இதேவேளை இராணுவத்தினரின் பங்களிப்புடனேயே குறித்த விகாரை பணி இடம்பெற்றது என்பதை அங்கு புதிதாக அமைக்கப்பட்ட கல்வெட்டுமூலம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த குருந்தூர் மலை பிரதேசத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதோடு இங்கு வருகைதருபவர்களை வாகனங்களை பதிவு செய்துவருகின்றனர்
இதன் மூலம் மீண்டும் குருந்தூர் மலையில் திட்டமிட்டு மேற்கௌ;ளப்பட்ட பௌத்தமயமாக்கல் முயற்சி அம்பலமாகியுள்ளது
நீதிமன்றத்தினால் எதுவித கட்டுமானப்பணிகளும் மேற்கொள்ளவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயுதப்படையிரின் பாதுகாப்பிற்கு மத்தியில் குருந்தூர் மலை கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு முற்றுப்பெற்றுள்ளது.
இனி அதனை அண்டிய பௌத்த குடியேற்றங்கள் தான் மேற்கொள்ளப்படவேண்டும் இந்த நிலையில் அந்த பகுதியினை சேர்ந்த இரண்டு விவாசாயிகள் தங்கள் காணிக்கா குருந்தூர் மலையில் புத்தர் இருந்த என்றும் அங்கு தங்களுக்கு எதுவித பிரச்சினை இல்லை என்றும் சொல்லிவருகின்றார்கள் ஒருவர் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளராக இருக்கின்றார் மற்றையவர் தனக்கு காணிகிடைத்தால் போது என்றுகொண்டிருப்பவர்கள்