முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் காணிகளுக்கான பத்திரங்கள் இல்லாத நிலையில் காணப்படுகின்றார்கள் இந்த நிலையில் எதிர்வரும் யூலை முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ள நடமாடும் சேவையில் காணி பத்திரங்கள் இல்லாத மக்களுக்கு பேமிட் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன.
ஏற்கனவே காணிகளுக்கு அழிப்வு உறுதி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கான அழிப்பு உறுதிகளும் நடமாடும் சேவை ஊடாக வழங்கப்படவுள்ளது.
காணி அனுமதிப்பத்திரத்தினை வழங்கும் செயற்பாட்டினை துரிதப்படுத்துவதற்காக நிலஅளவைத்திணைக்களம் விசேட ஏற்பாட்டினை மேற்கொள்ளவுள்ளார்கள் 24 நாட்கள் முகாம் இட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் நில அளவை செய்யப்படாத நிலங்கள் அளவீடுசெய்யப்பட்டு அவற்றை துரிதப்படுத்துவதன் ஊடாக காணிஅனுமதிபத்திரத்தினை வழங்கம் நிகழ்வும் துரிதப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.