முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய இளைஞன் ஒருவர் குளத்தில் இருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணையினை மேற்கொண்ட ஒட்டுசுட்டான் பொலீசார் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மூன்று இராணுவவீரர்களை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் வடக்கு கிழக்கு பகுதிகளில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் நீதியான விசாரணை வேண்டும் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் சம்பவத்தினை கிளிநொச்சியில் இருந்து விசேடமாக நியமிக்கப்பட்ட பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தலைமையில் மாங்குளம் பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொலிஸ்பொறுப்திகாரி உள்ளிட்டவர்கள் தலைமையிலான விசேட குழு ஒன்று குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில்..
17.08.25 இன்று சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் மேலும் ஒரு இராணுவ வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்