Monday, August 18, 2025
HomeMULLAITIVUஉடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டுகார்கள் படுசேதம்!

உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டுகார்கள் படுசேதம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருபு;பு பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வெகனர் கார்கள் படு சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று 18.08.2025 காலை இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த வெகனர் கார் ஒன்று உடையார் கட்டு பகுதியில் வீதியில் திருப்ப முற்பட்ட வெகனர் காருடன் மேதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் காரில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் மூங்கிலாறு ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தினை சந்தித்த இரண்டு கார்களிலும் சாரதியுடன் பணிகள் காணப்பட்ட நிலையில் விபத்தின் போது கார்களில் இருந்த பாதுகாப்பு பலூன்கள் நான்கு வெடித்து சிதறியுள்ளதுடன் இரு கார்களின் முன்பக்கங்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.
சம்பவ இடத்திற்கு வந்த புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவகின்றார்கள்.

வாகன சாரதிகள் விபத்துக்களை தவிர்க்க அவதானமாக வாகனங்களை ஓட்டுங்கள்..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments