இளவயதினரின் உயிரிழப்பு சம்பவங்களால் கதறும் குடும்பங்கள்!


அண்மையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக தவறான முடிவுகளை எடுத்து தங்கள் உயிரினை மாய்த்க்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கின்றது

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு வாரத்தில் மாத்திரம் நான்கு தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மூன்றும் குமுழமுனை பிரதேசத்தில் ஒன்றும் என பதிவாகியுள்ளது யாழ்ப்பாணத்தில் இரண்டு பல்கலை மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள் அண்மைய காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் தமிழ் சமூகத்தில் என்ன நிலை என்பதை எடுத்து காட்டுகின்றன.

தற்கொலை தவறான முடிவு ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் பல உண்டு பிரச்சினைகள் இல்லாத மனிதர்கள் இந்த உலகத்தில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் அவ்வாறு பிரச்சினைகள் இல்லாதவர்கள் என்று சொல்பவர்கள் பாதை தவறானது நாம் மனிதராக பிறந்து பயணிக்கும் பாதைகள் அனைத்தும் கரடுமுரடானது அவற்றை கடந்து செல்லவேண்டும் எதிர்நீச்சர் போட்டு வரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு அதையும் தாண்டி பயணிக்கவேண்டும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்து செல்லும் தற்கொலைகளால் உயிரிழந்தவர்களின்உறவுகள் கதறுகின்றார்கள்.

மறுபக்கத்தில் போதைவஸ்து பாவனையும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டு செல்கின்றதுஇதனை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட திணைக்களம் நடவடிக்கை எடுக்கின்றதா என்றால் அதுவும் கேள்விக்குறியாகி வருகின்றது ஜஸ்,கஞ்சா போன்ற பாவனையாளர்களையே பொலீசார் கைதுசெய்கின்றார்கள் அதனை விற்பனை செய்யும் வியாபாரிகளையும் கடத்தல் காரர்களையும் பாரியளவில் கைதுசெய்யாத நிலை தொடர்கின்றது.

இதனைவிட பல தொண்டு நிறுவனங்கள் சமூக மட்டத்திலும் பாடசாலைகளிலும் விளிப்புணர்வினை மேற்கொண்டு வருவதாக சொல்லிக்கொண்டாலும் அவற்றின் செயற்பாடுகள் இவ்வாறான சம்பவங்களை பார்க்கும் போது கவலையளிக்கின்றன.
போரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்பட்டாலும் அதனை காரணம் காட்டியும் பொருளாதாரத்தில் கட்டி எழுப்பவேண்டும் என்றும் பல அரசசார்பற்ற நிறவனங்கள் பாரியளவில் நிதியினை செலவு செய்து பணியாற்றி வருகின்றமை காணக்கூடியதாக இருக்கின்றது

இவ்வாறான நிறவனங்கள் சில சரியாக மக்களிடம் தங்கள் பணிகளை சென்றடைந்தாலும் தற்கொலை செய்யமுயற்சிப்பவர்களை எவராலும் தடுக்கமுடியாது இவ்வாறான முயற்சி செய்யும் மன நிலையில் இருந்து இவர்கள் மாறுபடவேண்டும் நாளாந்தம் விபத்துக்களால் உயிரிழப்பு,தற்கொலைகள் என சாவுகள் மலிந்த பூமியாக மாறிக்கொண்டிருக்கும் தமிழர் பிரதேசமாக காணப்படுகின்றது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *