புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது!


முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் மூவரை முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

இந்த சம்பவம் இன்று 19.06.23  அதிகாலை இடம்பெற்றுள்ளது.
புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்டுவதற்காக சாரணபோத்தல்கள் மற்றும் பூசைக்குரிய பொருட்களுடன் மண்வெட்டி சவல் என்பனவற்றை பயன்படுத்தி புதையல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் பூசை நடத்தி புதையல் தோண்ட முற்பட்ட வேளை முல்லைத்தீவு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவம் இடத்திற்க சென்ற முல்லைத்தீவு பொலீசார் புதையல் தோண்ட முற்பட்டவர்களை கைதுசெய்துள்ளதுடன் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்களையும் மீட்டுள்ளார்கள்.

சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *