கிளிநொச்சியில் காணாமல் போனவர் மல்லாவியில் அடித்து கொலை!


முல்லைத்தீவு ,மல்லாவி பாலிநகர் 3 வாய்க்கால் வயற்பகுதியிலிருந்து கடந்த 17.06.23 னெடறு சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது

இல 53, கட்சன் வீதி , வட்டகச்சியை சேர்ந்த இளையதம்பி ராஜ்மோகன் (49) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்

துணுக்காய் விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபோதே  இவர் காணாமல் போயிருந்ததாகவும்,  இவர் ஏற்கனவே கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் இவர் தனது உறவினரால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 14.06.23 அன்று தொடக்கம் இவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இவரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கா கொண்டுவரப்பட்டு மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரியின் பிரோத பரிசோதனையின் போது தலையில் அடிகாயங்கள் காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

18.06.23 அன்று  இவரின் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *