கவிஞர் சோமையா சுதர்சனின் குருதி படிந்த நிலம் கவிதைத்தொகுப்பு நூல் 18.06.23 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரத்தினை சேர்ந்த ஆசிரியரான கவிஞர் சோமையா சுதர்சனின் குருதி படிந்த நிலம் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு 18.06.23 அன்று மாலை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன் போது தனது குருதி படிந்த நிலம் என்ற புத்தகத்தின் செயற்பாடு தொடர்பில் தொலைபேசியில் தொடர்புகொண்ட புலனாய்வாளர்கள் தன்னிடம் பலதடவைகள் கேள்விகள் கேட்டதாகவும் புத்தகம் வெளியீடு செய்யப்படுமாக என்ற கேள்வி என்னுள் எழுந்துள்ளது புலனாய்வாளர்களின் பார்வையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எழுதப்பட்ட கவிதை தொகுப்பாக இருக்குமோ என்று அவர்களின் பார்வை இருந்திருக்கலாம் இந்த நிலையில் எனது படைப்பு அரங்கேறி இருக்கின்றது இது சந்தோசமாக இருக்கின்றது என்று நூலின் ஆசிரியர் சோமையா சுதர்சன் தெரிவித்துள்ளார்.
குருதிபடிந்த நிலம் கவிதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு ஆசிரியர் பே.யதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகபாராளுமன்றஉறுப்பினர் எஸ்.நோகராதலிங்கம், சிறப்பு விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் சி.பாஸ்கரன், முன்னால் உதவிக்கல்வி பணிப்பாளர் சி.பீதாம்பரம்,மன்னார் வலயக்கல்வி அலுவலகஉதவி கல்விப்பணிப்பாளர் க.மனோரஞ்சன்,உடையார் கட்டு மகாவித்தியாலய அதிபர் வி.ஸ்ரீதரன்.சுதந்திரபுரம் தமிழ்வித்தியாலய அதிபர் செ.மேகநாதன், நட்டுவாங்க ஆசான் ஆசிரியர் ந.குமரவேல்,ஆசிரியர் இராஜினி ஜோதிலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
குருதி படிந்த நிலம் கவிதைதொகுப்பிற்கான நயப்புரையினை மேனாள் உதவி விரிவுரையாளர் தமிழ்துறை யாழ் பல்கலைக்கழத்தினை சேர்ந்த முருகையா சதீஸ் அவர்கள் நிகழ்த்த ஏற்புரையினை நூலின்ஆசிரியர் சோமையா சுதர்சன் நிகழ்த்தியதை தொடர்ந்து நூல் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.நோகராதலிங்கம் அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நூலின் முதற்பிரதி சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
கவிதைத்தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் போது மாணவர்களின் நடன நிகழ்வுகள் என்பன சிறப்புற நடைபெற்றுள்ளதுடன் பிரதம விருந்தினர்கள் சிறப்பு விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றுள்ளன.