விவசாயிகளுக்கு இலவச உரம்- ஏக்கருக்கு 14 கிலோ!


ன்று போகங்களின் பின்னர் நாட்டிலுள்ள 12 இலட்சம் விவசாயிகளுக்கு இன்று(20) முதல் இலவசமாக PST உரம் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

36000 மெட்ரிக் தொன் PST உரம்  ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

அதில் 11537 மெட்ரிக் தொன் உரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களின் விவசாயிகளுக்கும் இன்று(20) பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

PST உரத்தை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கமநல சேவைகள் நிலையங்களினூடாகவும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பயிர்ச்செய்கைகளை ஆரம்பிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் இதே முறையில் உரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஒரு ஹெக்டேயருக்கு 55 கிலோகிராம் PST உரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *