முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மதவாளசிங்கன் குளம் காட்டுப்பகுதியில் உள்ள நாகஞ்சோலைப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.
இந்த சம்பவம் கடந்த 05.06.23 அதிகாலை இடம்பெற்றுள்ளது.
முள்ளியவளை கணுக்கேணியினை சேர்ந்த ஒருவரும் பூதன்வயல் பகுதியினை சேர்ந்த ஒருவரும் மற்றும் நொச்சியாகம,ராஜாங்கனை, சாலியஅசோகபுர,அம்பலாந்தோட்டை,தபுத்தேகம பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இதில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவபிரிவில் பணியாற்றும் இராணுவத்தினர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் புதையல் தோண்டுவதற்காக இயந்திரம் உள்ளிட்ட பொருட்களுடன் கோழி சேவலும் கொண்டு சென்றுள்ளார்கள் பலி கொடுப்பதற்காக கொண்டுசெல்லப்பட்ட கோழி சேவலையும் சிறப்பு அதிரடிப்படையினர் மீட்டுள்ளார்கள்
இவர்களை கடந்த 07.06.23 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது 14.06.23 வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதுடன் கோழி சேவலை பொலீசாரின் பாதுகாப்பில் வைக்குமாறும் பணித்துள்ளது. குறித்த கோழி சேவல் முள்ளியவளை பொலீசாரின் பாதுகாப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.