நாகஞ்சோலையில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேர் கைது!


முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மதவாளசிங்கன் குளம் காட்டுப்பகுதியில் உள்ள நாகஞ்சோலைப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.

இந்த சம்பவம் 05.06.23 இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
நாகஞ்சசோலைப்பகுதியில் புதையல் தோண்ட முற்படுவதாக முல்லைத்தீவு சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று அதிகாலை அங்கு சென்ற அதிரடிப்படையினர் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரையும் கைதுசெய்துள்ளதுடன் தோண்டுவதற்கு பயன்படுத்திய ஸ்கானர் இயந்திரம்உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளார்கள்.

முள்ளியவளை கணுக்கேணியினை சேர்ந்த ஒருவரும் பூதன்வயல் பகுதியினை சேர்ந்த ஒருவரும் மற்றும் நொச்சியாகம,ராஜாங்கனை,சாலியஅசோகபுர,அம்பலாந்தோட்டை,தபுத்தேகம பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இதில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவபிரிவில் பணியாற்றும் இராணுவத்தினர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர்களையும் சான்று பொருட்களையும் சிறப்பு அதிரடிப்படையினர் முள்ளியவளை பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள் முள்ளியவளை பொலீசார் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *