கஜேந்திரகுமாரை தாக்கிவிட்டு தப்பிஓடிய புலனாய்வாளர்-சுடவந்தார்களா?


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினை தாக்கிவிட்டு புலனாய்வாளர் ஒருவர் தப்பிஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் பதிவாகியள்ளது.

இதனால் அந்த இடத்தில் பதட்டமான நிலை உருவாகியுள்ளது.
இன்று மாலை பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடமராட்சி கிழக்குப்பகுதியில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வேளை திடிரென மோட்டார் சைக்கிளில் உட்புகுந்த இருவர் பிஸ்டலை எடுத்து சுடமுயற்சித்துள்ளதாக குற்றச்சாட்டப்பட்ள்ளது..

உடனடியாகவே அவர்கள் இருவரையும் அங்கிருந்த மக்கள் மடக்கிப்பிடிக்க முற்பட்ட போது பிஸ்டலுடன் வந்த நபர் தப்பியோடிவிட அவருடன் வந்தவர் பிடிக்கப்பட்டுள்ளார்.
தப்பி ஓடிய நபரை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அடையாளத்தினை உறுதிப்படுத்துமாறு கேட்டபோது பாராளுமன்ற உறுப்பினரை தாக்கிட்டு தப்பி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *