குளத்தினை ஆக்கிரமிக்கும் தனியார் மக்கள் எதிர்ப்பு!


புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர் மக்கள் எதிர்ப்பு மனுக்கையளிப்பு

உடையார் கட்டு கமநலசேவைத்திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டகுளமாக காணப்படும் வெள்ளப்பள்ளம் குளம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக குளமாக காணப்பட்டுள்ளது இந்த குளம் இருப்பதால் அருகில் உள்ள மக்களுக்கான குடிதண்ணீர்,கால்நடைகளுக்கான மேச்சல் மற்றும் தண்ணீர் மீன்பிடி தொழில் ,நிலத்தடி நீர் மற்றும் மேட்டுநில பயிர்செய்கை என மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இந்த குளத்தின் கீழ் விவசாய செய்கை காணப்படாத நிலையில் அருகில் சில காணிகளில் நெல்விதைப்பினை காலபோகத்தில் மேற்கொண்டுவருகின்றார்கள்.

இவ்வாறு காணப்படும் குளத்தினை தனிநபர் ஒருவர் அபகரித்து எல்லை வேலி நாட்டி தனிநபரின் அபகரிப்பிற்கு உள்ளாகியுள்ளதால் கிராம மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள் இவரின் இவ்வாறான நடடிக்கை மக்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கம் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு கமநல சேவைக்குட்பட்ட பதிவுசெய்யப்ப்டட குளமாக வெள்ளப்பள்ளம் குளத்தினை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து எல்லைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமைக்கு கிராம மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

இன்று 29.05.23 காலை வெள்ளப்பள்ளம் குளப்பகுதியில் மக்கள் எதிர்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள் புதாதைகளை தாங்கியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டு குளத்தினை தனிநபர் ஆக்கிரமிப்பிற்கு எதிர்பு தெரிவித்துள்ளார்கள் தொடர்ந்து அங்கு நாட்டப்பட்ட தூண்களை மக்கள் அகற்றியுள்ளார்கள்.

இதன்போது பொலீசாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள் குளம் ஆக்கிரமிப்பு தொடர்பில் கமக்கார அமைப்பினரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு சென்ற மக்கள் அங்கு பிரதேச செயலகம் முன்பாக எதிர்ப்பினை வெளிப்படுத்தி மனுவினை பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் அவர்களிடம் கையளித்துள்ளார்கள்.

இதன்போது குறித்த குளம் தொடர்பில் பிரதேச செயலாளர் மக்களுக்கு தமது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார்.
குளஆக்கிரமிப்பு தொடர்பில் மேலதிகாரிகளிடம் தெரியப்படுத்தி மேலும் ஆராயவுள்ளோம் முதல் ஆரம்ப கட்ட நடவடிக்கையின் படி குளம் அமைந்துள்ள காணி தனியார் காணியாக காணப்படுகின்றது குளத்தினை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு விவாசாய திணைக்களத்திடம் இருக்கின்றது மேலதிகமாக என்ன செய்யலாம் என்பது தொடர்பில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக குளமாக காணப்பட்டதால் காணியாருடையது என மக்கள் கருத்தில் எடுக்காத நிலையில் கமநலசேவைத்திணைக்களம் எவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது குளத்தினை அபகரித்த தனிநபர் இயற்கை மீன்வளர்பினை மேற்கொள்ளவுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குளத்தில்  இருந்து தண்ணீரை அப்புறப்படுத்தும் முகமாக தண்ணீர் வழிந்தோடும் வாய்க்காலினை ஆழப்படுத்தி தண்ணீரினை அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் ஈடுபட்டுள்ளளடன் தண்ணீர் ஓடும் பகுதியில்  வீதி ஒன்று அமையப்பெற்றுள்ளது அந்த வீதியின் பாலத்தினையும் உடைத்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *