வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய வட்டக்களரி முறையில் காட்டா விநாயகர் முன்றலில் சினம் கொண்டு சிலம்புடைத்து நீதி நிலைநாட்டிய கற்புக்கரசி கண்ணகி கதை கூறும் கோவலன் கண்ணகி நாட்டுக் கூத்து வரும் சனிக்கிழமை 27.05.2023 இரவு 7:00 மணிக்கு மிகச் சிறப்பான முறையில் ,முழங்கும் மத்தள இசையில், மண்மணம் வீசும் முல்லை மோடி கூத்தாக உங்கள் கண்களுக்கு கலை விருந்தளிக்க காத்திருக்கிறது.
பிரபல அண்ணாவியார் கலாபூஷணம் என்.எஸ்.மணியம் அவர்களின் நெறியாள்கையிலும் து.கஜேந்திரன் அவர்களினதும் , எம் மண்ணின் முதுபெரும் கலைஞன் சுப்பிரமணியம் அவர்களினதும் உதவி நெறியாள்கையிலும் ஒத்துழைப்பிலும் பிரபல ஒப்பனைக் கலைஞர் து.ஜெயகாந்தனின் உடையலங்கார ஒப்பனையிலும்,
முன்னாள் கோவலன் கூத்து ஒருங்கிணைக்கப்பாளர் இரத்தினம் வவுசர் ஸ்ரீ அவர்களின் நிதி அனுசரனையிலும், ரவியின் ஒளி ஒலி அமைப்பிலும் , பாரம்பரிய வட்டக்களரி முறையில் பாரம்பரிய கலைஞர்களின் யதார்த்தமான நடிப்புடன் உங்களுக்கு கலை விருந்தளிக்க காத்திருக்கிறோம்.
பண்பாடு மிகு மண்வாசம் வீசும் முல்லைமோடிக் கூத்தான கோவலன் கண்ணகி நாட்டுக் கூத்தை காணத்தவறாதீர்கள். அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.கலைப் பண்பாடு மிக்க எம் கூத்தை பார்க்க வாருங்கள்.கைதட்டல்களையும் பாரட்டல்களையும் கலைஞர்களுக்கு தாருங்கள்.உங்களை அன்போடு அழைக்கின்றனர் கலைத்தாய் நாடக மன்றம் முள்ளியவளை முல்லைத்தீவு.