Wednesday, April 30, 2025
HomeUncategorizedகாட்டா விநாயகர் நாடக கலாமன்றத்தின் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து!

காட்டா விநாயகர் நாடக கலாமன்றத்தின் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து!

முள்ளியவளையில் உள்ள காட்டா விநாயகர் நாடக கலாமன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் கோவலன் காண்ணகி நாட்டுக்கூத்து எதிர்வரும் 25.05.23 மாலை முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய முன்றலில் சிறப்புற நடைபெறவுள்ளது.

காட்டா விநாயகர் கலாமன்றம் நடத்திவரும்; பாரம்பரிய கூத்தும் நேர்த்திக்கடன் கூத்துமான கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்தானது வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கல் தினத்தினை முன்னிட்டு நடைபெறவுள்ளது.

25.05.23 வியாழக்கிழமை மாலை 7.00 மணிக்கு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய முன்னறில் சிறப்பாக அமைக்கப்பட்ட வட்டக்கலரியில் கணபதிப்பிள்ளை இந்துசன் அண்ணாவியாரின் நெறியாள்கையில்  அருளானந்தம் மயூரனின் உடைஅலங்கார ஒப்பனையுடன் பரம்பரை பரம்பரையாக கூத்தினை ஆடிவரும் தலைசிறந்த கலைஞர்களின் நடிப்பாற்றலுடன் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து இடம்பெறவுள்ளதாக நாடக காலமன்றத்தினர் அறிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments