Wednesday, April 30, 2025
HomeUncategorizedஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரருக்கு மஹா கும்பாவிஷேகம்!

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரருக்கு மஹா கும்பாவிஷேகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டன் பகுதியில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் திருவருள் மிகு பூலோகநாயகி உடனமர் வேகாவனேஸ்வரர் ( தான்தோன்றீஸ்வரர் ) பெருமாளுக்கு எதிர்வரும் 01.06.23 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

மகேந்திரபுரி,ஸ்வர்ணபுரி,ராவணேஸ்வரரம், என புராண இதிகாசங்களிலே புகழப்பட்டதும் இந்துமா கடலில் மத்தியில் இருக்கின்றதும் மாம்பழ வடிவாகிய இயற்கை அழகுடன் கூடியதுமாகிய லங்காதீப கற்பத்தின் வடபால் இயங்கை வளங்களும் ஆறுகளும் குளங்களும்,வற்றாத நீர் ஊற்றுக்களை தன்னகத்தே கொண்டதும் வந்தாரை வரவேற்று விருந்தோம்பும் பாங்கும் அடங்காப்பற்றின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் நல்லாட்சி புரிந்த முல்லை மாநாகரில் மேற்கே 15 ஆவது மைல்கல்தூரத்தில் ஒட்டுக்கள் சுட்டதனால் ஒட்டுசுட்டான் என்கின்ற காரணபெயரையும் கிழக்கே பிராமணகுளமும்,தெற்கே குடிதாங்கியார் குளமும்,மேற்கே விடத்தல் குளமும் வடக்கே காக்கைபணிக்கன் குளமும்,இயற்கை நீரூற்றுக்களாக அமைய பாலாறும்.தயிராறும் பெருகி வழிந்தோட வேண்டுவோர்க்கு வேண்டுவதை ஈந்தாளும் ஒட்டுக்களைச் சுட்டும் வேகாமல் வனத்திடை சுயம்புவாகி வந்துதித்து புலோகத்திலே உற்பத்தியாகிய காரணத்தினால் பூலோக நாயகியின் மணாளனாகவும், ஒட்டுக்களை சுட்டும்  வேகாத காரணத்தினால் வேகாவனேனேஸ்வரர் (தான்தோன்றீஸ்வரர்) என்கின்ற திருநாமம் பூண்ட சுயம்புலிங்கப்பெருமானுக்கு நிகழும் மாட்சிமை தங்கிய சோபகிருதி வருடம் உத்தராயண புண்ணிய காலம் இளவேனிற்காலம் வைகாசி மாதம் 18 ஆம் திகதி(01.06.23) வியாழக்கிழமை பூர்வபட்ச துவாதசிதிதியும் சுவாதி நட்சத்திரமும் அமிர்த சித்தயோகமும் கூடிய முற்பகல் 11.10 மணிதொடக்கம் 12.00 மணிவரையுள்ள சந்திரஹோரையயுடன் கூடிய சிம்ம லக்கின சுப நன்நாளிலே சுயம்பு லிங்கப்பெருமானுக்கும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் நவதள ராஜகோபுரத்திற்கும் மஹா கும்பாபிஷேகப் பொருவிழா இடம்பெற திருவருள் வியாபித்துள்ளது

 எனவே அடியவர்கள் அனைவரும் ஆசார சீலர்களாக கலாச்சாரத்தினை பேணிப்பாதுகாத்து ஆலதய்திற்கு வருகைதந்து நடைபெறும் இறை வழிபாடுகளிலும் கிரிகைகளிலும் கலந்து சுபீட்சமாகபேரானந்தப்பெருவாழ்வு வாழ வேண்டுகின்றார்கள் ஆலய முகாமைத்துவ சபையினர்

கர்மாரம்ப கிரியைகள் எதிர்வரும் 26.05.23 வெள்ளிக்கிழமை தொடங்கி 29,30,31 ஆம் திகதிகளான மூன்று நாட்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று 01.06.23 வியாழக்கிழமை மஹா கும்பாவிஷேகம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments