புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் மக்களின் மாடுகளை களவாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த இருவரை பிரதேச வாசிகள் பிடித்துபொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு சிவநகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமாக காணப்படும் மாடுகள் அண்மைக்காலத்தில் காணாமல் போயுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள் இவ்வாறு 10 குடும்பங்களின் கால்நடைகள் காணாமல்போயுள்ளது தேடியும் இதுவரை கிடைக்காத நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் 21.05.23 அன்று மாலை கைவேலி பகுதியில் மாடுகளை கட்டிவைத்துவிட்டு வாகனத்தில் ஏற்றும் மாடுகடத்தும் இருவரை பிரதேச வாசிகள் கையும் களவுமாக பிடித்து புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
இரண்டு பசுமாடுகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தவேளை இவர்கள் மக்களால் பிடிக்கப்பட்டு பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மாடுகளை ஏற்றுவதற்கா பயன்படுத்திய வாகனம் மற்றும் இரண்டு மாடுகள் என்பன ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரங்களில் ஒன்றாக காணப்படும் கால்நடைகள் திருடப்பட்டு இறச்சிக்காக கொண்டுசெல்லப்படுவதும் இறச்சியாக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் சம்பவங்களும் அண்மை நாட்களில் அதிகளவில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.