முல்லைத்தீவு மாவட்ட சவாரி சங்கம் விசுவமடுவில் அங்குரார்பணம்!


முல்லைத்தீவு மாவட்ட மாட்டுவண்டில் சாவரி சங்கம் வடமாகணத்தில் பதிவுசெய்யப்பட்டு விசுவமடு தொட்டியடி சவாரி திடலில் அங்குரார்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
21.05.23 இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு விருந்தினர் கௌரவ விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு பாடசாலை மாணவியின் வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து நிகழ்வு சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

நீண்டகாலமாக பதிவு செய்யப்படாத நிலையில்  இருந்த மாவட்ட  சவாரி சங்கம் வடமாகாணத்தில் பதிவுசெய்யப்பட்டு விசுவமடு தொட்டியடியில் அங்குரார்பண நிகழ்வு முல்லை  மாவட்ட சவாரி சங்க தலைவர் லோகநாதன்  சயேந்திரா தலைமையில் சிறப்புற நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு திணைக்கள அதிகாரி முகுந்தன் மற்றும் கிழை மாட்டு வண்டில் சவாரி சங்கங்களின் தலைவர்கள் செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள்

இதன்போது சவாரிசங்கம் வடமாகாணத்தில் பதிவு செய்வதற்காக உழைத்த உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.

விசுவமடு தொட்டியடி கிராமத்தில் இயங்கிவரும் லாலா றஞ்சன் கராட்டி கழகத்தில் தற்காப்பு கலை பயின்று வரும் மாணவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் சீருடைகள் வழங்கிவைக்க்பபட்டுள்ளன.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *