யாழ் மருத்துவமனையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு!
விசுவமடுவில் இருந்து யாழ்ப்பாண மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்வையிட சென்றவேளை யாழ் பொது மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்களின் பக்கச்சார்பான நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறவினரை பாராமரிப்பதற்காக நின்றவரை மாற்றிவிடுவதற்காக முல்லைத்தீவு விசுவமடு புன்னைநீராவி பகுதியில் சென்றவேளை அங்கு பொதுமக்களை பார்வையிடும் நேரம் தவிர்ந்த நேரத்தில் காவலில் நின்ற காவலாளிகள் வேறு நபர்களை மருத்துவமனைக்குள் சென்றுவர விட்டதை அவதானித்துள்ள நிலையில் அங்கு அவரும் சென்றுள்ளார்.
இன்னிலையில் அவரை செல்லவிடாமல் தடுத்துள்ளதுடன் காவலிகளுக்கும் அவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது அதன்போது காவலாளிகளிடம் அவர் கேட்டார் வேறு ஆட்கள் சென்று வருகின்றார்கள் நான் ஏன் செல்லக்கூடாது என்று அது எங்கள் விருப்பம் என்று காவலாளி எதிர்த்து கூறி குறித்த நபரை உள்நுளைய அனுமதிக்காத நிலையினால் பாதிக்கப்பட்ட நபர் பல்வேறு தரப்பினருக்கு முறையிட்டுள்ள நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.
நீண்ட தூரங்களில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் நபர்களை இவ்வாறு இழுத்தடிப்பு செய்யும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பில் வடமாகாண ஆளுனர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றிலும் மருத்துவமனை பணிப்பாளருக்கும் விடையம் குறித்து முறையிட்டுள்ளார்.