யாழ்ப்பாபணம் வண்ணார்ப்பன்னையைச் சேர்ந்த கவிஞர் சு. நிஷேவிதசர்மா எழுதிய ‘காதோரமுத்தங்கள் ’ எனும் காதல் சார்ந்த கவிதை நூல் 7ம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு,(J Hotel, Jaffna) ஜே ஹோட்டலில் வெளியிடப்பட்டது.

ஒரு ஆண் பெண் மீது கொண்டுள்ள காதல், அவள் மீதான தீரா அன்பு, காதலியின் ஸ்பரிசம், காதலும் களவும், காதலர்களின் பிரிவு, காதலியின் பிரிவினால் ஏற்படும் காதலனின் பரிதவிப்பு, பிரிவாற்றமை, காதலி மீதான காதலனின் ஏக்க உணர்வு போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதை நூல் அமையப்பெற்றுள்ளது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இ. த. ஜெயசீலன் பிரதேச செயலாளர், பிரதேச சபை பச்சிலைப்பள்ளி, சிறப்பு விருந்தினராக save a life இன் நிறைவேற்றுப்பணிப்பாளர் ராகுலன் கந்தசாமி ஆகியோர்கள் பங்குப்பற்றி இருந்தார்கள்.
இந்நிகழ்வினை கீர்த்திகா ஜீவரஞ்சன் தொகுத்து வழங்கியதோடு கவிஞர் வசீகரன் ரொபின்சன், பேச்சாளர்களான கேசிகா சாம்பசிவம், யமீனா கிருஷ்ணசாமி, திஷான் சிவகுமார் ஆகியோர்கள் நூல் தொடர்பான கருத்துறைகளையும் வழங்கி இருந்தனர். மேலும் இந்நிகழ்வில் புத்தக நேயர்கள், உறவினர்கள், கவி புனைபவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
தமிழர்கள் மத்தியில் இன்னும் பல படைப்பாளிகள் உருவாகவேண்டும் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் தங்கள் ஆக்கங்களை ஆவணப்படுத்தவேண்டும் புத்தகங்கள் எழுதவேண்டும் அவை எமது சொத்தான யாழ் நூலகத்திலும் ஆவணமாக வைக்கவேண்டும் அடுத்த தலைமுறைக்கு தமிழர்களின் வாழ்வியல் காலாச்சார விழுமியங்களை கொண்டுசெல்லும் என்றும் அழியாத ஒரு ஆவணமாக இந்த புத்தகங்கள் காணப்படும் தற்போது இணையத்தில் எல்லோர்கைகளிலும் தொலைபேசியின் சுறண்டல்கள் ஆக்கிரமித்து நிக்கும் வேளையில் இவ்வாறான புத்தக வெளியீடுகள் என்பது வரவவேற்கத்தக்கது அதனை நாங்கள் எமது இணையத்தின் மற்றும் முகநூல் பக்கங்கள் ஊடாக வெளிப்படுத்துகின்றோம்


