முல்லைத்தீவு மாவட்டத்தில் கார்த்திகை 27 மாவீர் நாளினை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் ஏற்பாட்டுக்குழுக்களினால் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையின் ஐனாதிபதி அனுரகுமார திஸ்சநாயக்க தலைமையிலான அரசாங்கம் போரில் உயிரிழந்தவர்களை நினைவிற்கொள்ளதற்கான உரிமையினை எந்த இடையூறுகளும் அனுமதித்துள்ள நிலையில் சில இடங்களில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவ முகாம்களாக காணப்பட்டாலும் பல இடங்களில் மாவீரர் துயிலும் இல்லத்தினை அழகுபடுத்தும் நடவடிக்கையில் ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டு வரும் அதேவேளை மாவீரர்களின் பெற்றோர்களையும் மதிப்பளிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றது.
மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு பணிகள்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு மாவீரர் துயிலும் இல்லம்,இரணைப்பாலை மாவீரர்துயிலும் இல்லம்,பச்சைப்புல்மோட்டை மாவீரர் துயிலும் இல்லம்,இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம்,முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம்,வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் என்பன ஏற்பாட்டு குழுக்களினால் அழகுபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் கௌரவிக்கும் நிகழ்வுகளும் ஏற்பாடாகியுள்ளது.
மாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பிரதேசத்தில் ஒரு தொகுதி மாவீரர் பெற்றோர்கள் கடந்த 09.11.2025 அன்று அழைத்து கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
புலம்பெயர்ந்த நன்கொடையாளர்கள்,அமைப்புக்களிடம் இருந்து நிதியினை பெற்ற ஏற்பாட்டாளர்கள் குழுக்கள் தாயகத்தில் உள்ள மாவீரர் பெற்றோர்களை அழைத்து மண்டம் அல்லது சிறப்பாக ஒழுக்கமைக்கப்பட்ட இடங்களை தெரிவு செய்து மாவீரர்களின் படங்களை வைத்து பொச்சுடர் ஏற்றி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்துவதுடன் அஞ்சலி உரைகளையும் நிகழ்த்தி வருகின்றார்கள்.
இவ்வாறான அஞ்சலி உரைகளை முன்னாள் போராளிகள் தளபதிகள் நிகழ்த்தி வருகின்றார்கள் இதன்போது அழைத்துவரப்பட்ட மாவீரர் பெற்றோர் உரித்துடையவர்களுக்கு ஒருவேளை உணவும் பழமரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்படுகின்றார்கள்.
இன்னும் தாயகத்தில் நாட்டிற்காக தங்கள் பிள்ளைகளை உகந்தளித்த பல குடும்பங்கள் பெற்றோர்கள் உறவினர்கள் தவித்து வருகின்றார்கள் அவ்வாறான குடும்பங்களை இனம் கண்டு அவர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொடுக்கவேண்டும்
காலத்தால் அழியாத மாவீரர்களை நினைவிற்கொள்வதற்க ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமையுண்டு மாவீரர்களின் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் மதிப்பளிக்கப்படவேண்டும் அவர்களும் ஏனைய மக்களை போல் இந்த நாட்டில் வாழவேண்டும் தாயக கனவுடன் சாவினைத்தழுவிய மாவீரர்களின் கனவு நனவாகும் வரை இவ்வாறான நிகழ்வுகள் முன்னெடுத்து செல்லவேண்டும் தமிழர் என்ற நாமம் உலகில் இருக்கும் வரை மாவீரர்களை பூசித்து வணங்கவேண்டும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் இந்த மரபுவழி வழிபாட்டினை கடத்தி செல்லவேண்டும் இது மாவீரர் மாதம் கார்திகையில் ஒவ்வொரு மாவீர்களின் வரலாற்றினையும் அவர்கள் ஈகம்,வீரம் என்பவற்றினையுமய் இளம் தலைமுறைக்கு கொண்டுசெல்லவேண்டும்…
