முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு சொகுசு பேருந்து சேவையினை நடத்துவதற்கான அனுமதியினை வழங்க கோரி பல்வேறு பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் இன்று தொடக்கம்(12) தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் வெளிமாவட்டத்தினை சேர்ந்த பிரபல்யமான ஒரு பேருந்து சேவையினர் முல்லைத்தீவு கொழும்பிற்கான சொகுசு பேருந்து சேவையினை தொடங்கவுள்ளார்கள்.
இந்த செயற்பாடானது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பேருந்து உரிமையாளர்களுக்கு பாரிய ஏமாற்றத்தினை கொடுத்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருநது உரிமையாளர் சங்கத்தினர் முல்லைத்தீவு கொழும்புக்கு சேவையினை வழங்குவதற்கான அனுமதியினை வழங்குமாறு கொழும்பில் உள்ள உயர் பீடங்களிடம் பல தடவைகள் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் வெளிமாவட்ட பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு தற்போதைய அரசாங்கம் அனுமதியினை வழங்கியுள்ளமை ஏமாற்றமளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் என்தனை கோடி பணம் செலவு செய்தும் சொகுசு பேருந்தினை கொள்வனவு செய்வதற்கும் பேருந்து உரிமையாளர்கள் இருக்கின்றார்கள் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளரிடம் சகல வசதிவாய்ப்புக்களும் உள்ள நிலையில் வெளிமாவட்டத்தினை சேர்ந்தவருக்கு இந்த வீதி அனுமதியினை அனுர தலைமையிலான அரசாங்கம் வழங்கியுள்ளமை முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு கவலையளிக்கும் செயலாக அமைந்துள்ளதாக பேருந்;தின் சாரதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அவர்களின் பேருந்தினை இயக்குவதற்க மாகாணம் விட்டு மாகணம் செல்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளபோதும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பேருந்து உரிமையாளர்களுக்க மாவட்ட மட்டத்தில் இருந்து மாகாணம் வரைக்கும் இயக்குவதற்கான அனுமதிப்பத்திரமே வழங்கப்பட்டுள்ளது இதுவும் ஒரு திட்டமிட்ட செயல்
சொகுசு பேருந்திற்கான அனுமதியினை முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த பேருந்து உரிமையாளர்களுக்கு அரசாங்கம் வழங்குமாக இருந்தால் எத்தனை கோடிரூபா செலவானலும் சொகுசு பேருந்துக்களை ஒரு வாரத்திற்குள் கொள்வனவு செய்து மக்களுக்கான சேவையினை வழங்க தயாராக உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தின் அங்கத்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த அரசாங்கம் வெளிமாவட்டத்தினை சேர்ந்த பேருந்து உரிமையாளருக்கு வழங்கிய முல்லைத்தீவு கொழும்பு பேருந்து சேவை அனுமதியினை முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பேருந்து உரிமையாளர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்தவர்களுக்க முன்னுரிமை அடிப்படையில் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
