முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி தோண்டும் நடவடிக்கை ஒன்று இன்று (4) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலைவீதியில் வலைஞர்மடம் சந்திக்கு அருகில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் இரகசிய தகவல் கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியுடன் தோண்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கனரக இயந்திரம்கொண்டு குறித்த பகுதி 15 அடிக்கு மோல் தோண்டியும் எதுவும் கிடைக்காத நிலையில் தண்ணீர்தான் கண்டுள்ளார்கள்.
இந்த நிலையில் அகழ்வுப்பணியினை கைவிட்டுள்ளார்கள் குறித்த பகுதிக்கு அண்மையில் ஏற்கனவே பாரிய படைமுகாம் ஒன்று போரிற்பு பின்னர் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
