குடும்ப புணர்வாழ்வு நிலையத்தினால் ஆசிரியர்களுக்கான செயலமர்வு!


குடும்ப புணர்வாழ்வு நிலையத்தினால் ஆசிரியர்களுக்கான செயலமர்வு

யு எஸ் எயிட் (USAID) நிறுவனத்தின் நிதி உதவியுடன் சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்பாடு (SCORE) திட்டத்தின் கீழ் குடும்ப புணர்வாழ்வு நிலையத்தினால் உளநலம் மற்றும் உளசமூகம் சார் சேவைகள் எனும் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் 45 பேருக்கு பன்னிரெண்டு நாள் செயலமர்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது 

பாடசாலை மட்டங்களில் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு அதனை முறையாக தீர்ப்பதற்காக  வழிகாட்டலும் ஆலோசனையும் எனும்  குறித்த செயலமர்வு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் என நியமனம் பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் 45 பேருக்கே முன்னெடுக்கப்பட்டுள்ளது

இவர்களுக்கான12 நாள் செயலமர்வின் இறுதி நாள் செயலமர்வு நேற்று (29) வட்டக்கச்சியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சியின் பின்னர் தங்கள் பாடசாலைகளில் இவர்கள் செயற்பட தேவையான மேலதிக  உதவிகள் வழங்கப்பட உள்ளன.

குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் ஒழுங்கமைப்பில் மாகாண கல்வி அமைச்சின் நெறிப்படுதலில் இந்த செயற்றிட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *