முல்லைத்தீவு மாவட்ட கடலில் உள்ள மீன் குஞ்சுகளை சட்டவிரோத கடற்தொழிலாளர்கள் அள்ளிசென்றுள்ளதால் தற்போதைய காலத்திற்கு ஏற்ற மீன்களின் பெருக்கம் இல்லாத நிலையில் கடல் காணப்படுவதாக கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு கடலில் மீனவர்கள் தொழிலுக்கு செல்வது குறைவாக காணப்படுவதுடன் மீன்களுக்கான தட்டுப்பாடும் காணப்படும் நிலையில் மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளது.
சுருக்குவலை தொழிலாளர்களால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இப்போது சூடைமீன் 500 கீரைமீன் 800 சூரை மீன் 1000 ரூபாவிற்கு மீனவர்கள் கடற்கரையில் விற்பனை செய்கின்றார்கள் படகுகள் தொழிலுக்கு சென்றாலும் மீன் இல்லாத நிலையினால் பல கடற்தொழிலாளர்கள் தொலுக்கு செல்லாத நிலையில் காணப்படுகின்றார்கள் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.