பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் இருந்த பெண் வீட்டில் உயிரிழந்த நிலையில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இன்று சம்பவ இடத்துக்கு நீதிபதி உடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக உடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் பாலைப்பாணி கிராமத்தில். தனிமையில் வசித்து வந்த ராமசாமி ராமாயி. எனும் 70 வயதுடைய மூதாட்டி வீட்டில் உடலமாக கிடப்பதாக கிராமத்தவர்களால் நேற்று (22) மாலை மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்று காலை கிளிநொச்சி தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் அத்தோடு உடலத்தை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் எஸ் ஏச் மஹ்ரூஸ் பார்வையிட்ட பின்னர்
உடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உடலத்தை உறவுகளிடம் ஒப்படைக்குமாறும் தெரிவித்துள்ளார்
மூதாட்டியிடமிருந்து நகைஉள்ளிட்ட பொருட்களை களவாடும் நோக்குடன் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் உடலம் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்