நுற்றாண்டு விழா 100 பானைகளில் பொங்கல் வைத்த கனகராயன்குளம் மா.வி!

கனகராஜன்குளம் மகா வித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரதனோட்டம் மற்றும் நூறு பானை பொங்கல் விழா 

வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட கனகராஜன்குளம் மகாவித்தியாலயம் இந்த ஆண்டு நூறாவது ஆண்டில் கால் பதிக்கிறது அந்தவகையில் நூற்றாண்டு விழாவை பாரிய அளவில் கொண்டாட பாடசாலை சமூகம் ஏற்ப்பாடுகளை செய்துவருகிறது

அந்தவகையில் நூற்றாண்டு விழாவை ஒட்டி பல்வேறு போட்டி நிகழ்வுகளை ஏற்ப்பாடு செய்துள்ளனர் அதன் ஒரு அங்கமாக நேற்றையதினம் (29) மாபெரும் மரதனோட்ட போட்டியும் நூறு பானைகளில் பொங்கல் பொங்கும் நிகழ்வும் இடம்பெற்றது 

அந்தவகையில் நேற்று காலை பன்றிக்கெய்தகுளம் சந்தியில் இருந்து மரதனோட்ட போட்டி பாடசாலை முன்னாள் அதிபர் ச.பத்மநாதன் அவர்களால் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த போட்டியானது ஏ _9 வீதி வழியாக வருகை தந்து கனகராஜன்குளம் மகாவித்தியாலய முன்றலில் நிறைவடைந்தது 15 Km தூரம் கொண்ட இந்த போட்டியில் 

வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலய மாணவன் -பா.விழிவண்ணன் முதலாமிடத்தையும் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் ர.பிரசாந் இரண்டாமிடத்தையும் 

வவுனியா சின்னடம்பன் பாரதிவித்தியாலய மாணவன் ச.கபிலன் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்

இதனை தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் நூறு பானைகளில் பொங்கல் பொங்கி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது

இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் முன்னைநாள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் பாடசாலை பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர் 

இதன் தொடர்ச்சியாக மாபெரும் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி ஒன்றினையும் செய்யவுள்ளதாக பாடசாலை சமூகத்தினர் அறிவித்துள்ளனர்

Tagged in :

Admin Avatar