முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் 8 படகுகள் 29 மீனவர்கள் கைது!

முல்லைத்தீவு – நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 29 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடற்பரப்பில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்தது. இவ்வாறு தொடர்ச்சியாக சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுவருவதாக முல்லைத்தீவு மீனவ அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் கடற்படையினர் இந்தநடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள் இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 8 டிங்கி படகுகளும் சுழியோடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு, முல்லைத்தீவு, கிண்ணியா, சீன துறைமுகத்தை சேர்ந்த 29 தொடக்கம் 56 வயதிற்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட டிங்கி படகுகள், உபகரணங்களுடன் சந்தேகநபர்கள் முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Tagged in :

Admin Avatar