Tuesday, April 29, 2025
HomeUncategorizedகிரியைகள் செய்யும் டிஸ்கோ ஐயர் அடித்து கொலை பணம் நகைகள் கொள்ளை!

கிரியைகள் செய்யும் டிஸ்கோ ஐயர் அடித்து கொலை பணம் நகைகள் கொள்ளை!

முல்லைத்தீவில் மரணக்கிரியைகள் செய்யும் ஐயர் கொலை-நகை பணங்கள் கொள்ளை.

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில்வசித்து வரும் 69 ஆகவையுடைய அப்பாதுரை வேலாயுதம் எனப்படும் மரணக்கிரியைகள் அந்தியோட்டிகிரியைகள் செய்து வரும் டிஸ்கோ ஐயர்  என மக்களால் அறியப்பட்ட குடும்பஸ்தர்  கொலை செய்யப்பட்டு அவரிடம் இருந்த நகைகள் பணங்கள் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இன்று 28-.04.23 அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் மனைவின் உறவினர் ஒருவரான  யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்தவரும்  என மூவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை வீட்டின் ஜன்னலை பிரித்த கொள்ளையர்கள் யன்னல் கம்பியினைப் உடைத்து வீட்டுக்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த வயதான நண்பரையும் மனைவியினையும்  கை கால்கள் கட்டி வாயும் கட்டி வைத்துவிட்டு ஐயர் மீது தாக்குதல் நடத்தியவேளை ஐயர் விழுந்துள்ளார்

வீட்டிற்குள் நுளைந்த இரு சந்தேக நபர்களும் முகத்திற்கு துண்டுகளை கட்டி கையில் வாள் கொட்டங்கள் கொண்டுவந்துள்ளதாக பாதிக்கப்பட்ட வயோதிபர் தெரிவித்துள்ளார்.

ஐயர் விழுந்த சம்பவத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்த ஐயரின் 15 பவுன் நகைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் (அண்ணளவாக) கொள்ளையர்கள் கொள்ளை இட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்
 மயங்கிய நிலையில் காணப்பட்ட ஐயர் அதேவேளை கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட மனைவி மற்றும் வயதான உறவினர் ஆகியோர் அதிகாலையில் கை கால் கட்டுகளை அவிட்டு விட்டு வெளியில் வந்து பார்த்தபோது ஐயர் நிலத்தில் குப்பற விழுந்த  நிலையில் காணப்பட்டுள்ளார்  

அச்சமடைந்த இருவரும் என்ன செய்வது என்று தெரியாத நிலையில்
வீட்டிற்கு  முன்னாள் உள்ள கடை ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள் கடைக்காரர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது உடன் தடையவியல் போலீசார் வரவழைக்கப்பட்டு தடயங்கள் துப்பறியப்பட்டுள்ளன

இதன்போது வீட்டிலிருந்த ஐயரின் மனைவி மற்றும் மனைவியின் உறவினரான ஒருவரும் போலீசாரின் விசாரணைக்குள் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்

சம்பவ இடத்திற்கு மேப்பநாய் வரவளைக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரியும் நேரில் வந்து பார்வையிட்டுள்ளதுடன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா பார்வையிட்டு விசாரணைகள் மேற்கொண்டுள்ளார்.
 உடலம்  மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் இது தொடர்பிலான விசாரணை முல்லைத்தீவு போலீசாரை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் பெற்ற இந்த கொலை கொள்ளை சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments