முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவத்தினை முன்னிட்டு பொங்கல் விழா ஏற்பாடு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (27) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
வற்றாப்பாளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வின் முன் நிகழ்வாக வருகின்ற வைகாசி மாதம் 22 ஆம் திகதி பாக்குத்தெண்டலும் , 29 ஆம் திகதி தீர்த்தமும், ஆனி மாதம் 5 ஆம் திகதி வருடாந்த பொங்கல் உட்சவமும் நடைபெவுள்ளது.
இந்த நிகழ்வின் முன்னாயத்த ஏற்பாடுகள் தொடர்பில் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் ஆலய உட்சபத்திற்கு வருடா வருடம் உதவிடும் ஏனைய திணைக்களங்களுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம் ), மாவட்ட பிரதம கணக்காளர் திரு.ம.செல்வரட்ணம், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மாவட்ட பொறியியலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அதிகாரி, மின்சாரசபை பொறியியலாளர், நீர் வழங்கல் அதிகாரிகள், கரைதுறைப்பற்று பிரதேசசபை உத்தியோகத்தர்கள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், இலங்கை செஞ்சிலுவை சங்க உறுப்பினர், முல்லைத்தீவு மாவட்ட பொஸிஸ் பொறுப்பதிகாரி, முல்லைத்தீவு மாவட்ட இராணுவப் பொறுப்பதிகாரி, பொலிஸார், இராணுவத்தினர், ஆலய பரிபாலன சபையினர், கலாசார உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் ஆலய உட்சவ காலத்திற்கு தேவையான ஆலய வளாகத்தை சூழவுள்ள வீதிகள் புனரமைப்பு, ஆலய வளாக தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களோடு ஆலயத்துக்கு வருகைதரும் பக்தர்களுக்காக சுகாதாரம், குடிநீர்,போக்குவரத்து வசதி மின்சாரம்,பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது