Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கருவி!

பேராதெனியா பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவினைச் சேர்ந்த டியூக் பல்கலைக்கழகம் என்பவற்றின் தொழிநுட்ப ஒத்துழைப்புடன்  மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் மாவட்டங்கள் தோறும் வளி மண்டல மாசடைவைக் கண்காணிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முல்லைத்தீவின் காற்று மாசடைவை அளவிடும் Bluesky Particulate Air Pollution Censor எனும் சாதனம் இன்றைய தினம் (27)  மாவட்ட செயலக வளாகத்தில் பேராதெனியா பல்கலைக்கழக தொழிநுட்ப குழுவினால் பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இச் சாதனமானது ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில்  வளி மாசடைவு அளவீட்டினை மத்திய சுற்றாடல் அதிகார சபையின்  கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கும். 

இச் செயற்பாட்டில் பேராதெனியா பல்கலைக்கழக ஆய்வு அலுவலர் மகேஷ் சேனாரத்ன, மாவட்ட செயலக தகவல் தொழிநுட்ப உத்தியோகத்தர் யோ.மதுசூதன் மற்றும் முல்லைத்தீவு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சூழலியல் உத்தியோகத்தர் ந.சஜீவன் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *