முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவருமான க.குமணன் அவர்களின் தந்தையார் இன்று இயற்கை எய்தினார் அன்னாரின் பரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்
முன்னாள் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்
செல்லப்பா கணபதிப்பிள்ளை
6ம் வட்டாரமம் குமுழுமுனையினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்லப்பா கணபதிப்பிள்ளை அவர்கள் 01.01.2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலம் சென்ற செல்லப்பா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலம்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஞானப்பூங்கோதை(வண்ணக்கா)வின் அன்பு கணவரும்,வள்ளியம்மை,அன்புச்செல்வி ஆகியோரின் அன்பு சகோதரனும், கௌதமன்-சாய்பால் உற்பத்திகள் உரிமையாளர்,பிரணவன்-கனாடா,காயத்திரி,அரவிந்தன்-பிரான்ஸ்,றமணன்,குமணன்-ஊடகவியலாளர்,தலைவர் முல்லைத்தீவு ஊடகஅமையம்,கௌசிகன் ஆகியோரின் அன்புத்தந்தையும்.
லோகேஸ்வரி-கிராமியவைத்தியசாலை குமுழமுனை,மதிவதனி,கிருபானந்தன்,மேகலா,மயூரி,டிலானி-ஆசிரியர் யாழ்இந்துக்கல்லூரி, ஆகியோரின் அன்பு மாமனாரும்.
கவிநிலவன்,இஸ்ரெயாசாய்,றெக்சிகா,சனோயன்,நிதுசான்,டஸ்வனா,லதுஞ்சன்,டொஜிகா,டிஸ்மிதன்,யஸ்விந்,ஆர்விகா ஆகியோரின் அன்பு பேரனும்
கிஸ்ணானந்தம்,காலம்சென்ற சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரியைகள் நாளை(02.01.2024) வியாழக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பி.ப.2.00 மணியளவில் உடலம் தகனக்கிரியைக்காக குமுழமுனை தாமரைக்கேணி இந்து மயானத்திற்கு உடுத்து செல்லப்படும்.
தகவல்
குடும்பத்தினர்.