புத்தாண்டு நாளான இன்று(01.01.2025) இரவு முல்லைத்தீவு,மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் படுகாயமடைந்துள்ளார்கள்
முல்லைத்தீவு அளம்பில் வீதியில் உடுப்புக்குளம் பகுதியில் பெறுமதியான வாகனத்துடன் உந்துருளியில் பயணித்தவர் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளியில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள் உந்துருளியில் பயணித்தவர் தலைக்கவசம் அணியவில்லை என்றும் அதிவேகத்தில் பயணித்து இந்த விபத்தினை சந்தித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனை விட புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உந்துருளியில் பயணித்தவர் மாடு ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் படுகாயமடைந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உலகளந்த பிள்ளையார் கோவில் செல்லும் சந்திப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது றெட்பான பகுதியினை சேர்ந்த ஒருவரே படுகாயமடைந்துள்ளார் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.