போதைப்பொருளை கட்டுப்படுத்த பொலீஸ் அசண்டை -பொது அமைப்புக்கள் குற்றச்சாட்டு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான போதைவஸ்த்து தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று 24.03.23 இன்று நடைபெற்றுள்ளது

புதுக்குடியிருப்பு பிரதேச கிராம அபிவிருத்தி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது.

பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு கலந்துரையாடல் ஆரம்பமானது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட கிராம, இளைஞர்கள் எதிர்நோக்கும் போதைப்பொருள் துரித பரவல் தொடர்பில் சிறப்பு ஆலோசகர் சுகாதார வைத்திய அதிகாரி ப.சத்தியரூபன் அவர்களால் ஆராயப்பட்டது.

பிரதேச மட்டத்தில் போதைப்பொருளின் பாவனை, உற்பத்திகளை இயன்றளவு குறைக்கவும் அவற்றை கிராம மட்டத்தில் செயல்படுத்தவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
கிராம மட்ட கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்களை உள்ளடக்கி குறித்கலந்துரையாடல் இடம்பெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி ப.சத்தியரூபன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி கிளை உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உறுப்பினர்கள் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்

Tagged in :

Admin Avatar