Tuesday, April 29, 2025
HomeUncategorizedவெடுக்குநாறி ஆதிசிவன் வழிபாட்டு உரிமையினை பெற்றுக்கொடுத்தார் எம்.ஏ.சுமந்திரன்!

வெடுக்குநாறி ஆதிசிவன் வழிபாட்டு உரிமையினை பெற்றுக்கொடுத்தார் எம்.ஏ.சுமந்திரன்!

வெடுக்குநாறி மலையில் ஆதி லிங்கேஸ்வரர் சிலைகளை உடைத்தது சம்பந்தமான வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் 24.04.23 இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் ஆலய நிர்வாகம் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினரும்மான எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியுள்ளதுடன் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகளும் பிரசன்னமாகி இருந்தார்கள்.

இதன்போது நீதவான் அவர்களுக்கு வழிபாட்டு உரிமை தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எமது அரசியலமைப்பின் 10 ஆம் 14:1 உ உறுப்புரைகளின் கீழ் மத வழிபாடு என்பது எவராலும் மட்டுப்படுத்த முடியாத உரிமைகள்.
மரத்தையோ கல்லையோ வழிபடலாம் அதற்கு பூரண உரித்துள்ளது.

அந்த மரம் வனப்பிரதேசத்தில் இருப்பதால் வணங்க முடியாது என எவரும் கூறமுடியாது. ஒரு கல் தொல்லியலுக்குரியது என்பதற்காக அதனை வணங்க முடியாது என எவரும் கூற முடியாது.

அவ்வாறு சொல்வதாக இருந்தால் அனுராதபுரத்திலும் பொலன்னறுவையிலும் சென்று எவரும் வழிபட முடியாது.

இந்த விடயங்களை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் நீதவான் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளார்.

அதாவது வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடைக்கப்பட்ட சிலைகளை மீள கட்டுவது சம்பந்தமாக தொல்லியல் பிரதேசம் என்ற காரணத்தினாலே மீள் அமைப்பதும் தொல்லியல் என்ற காரணத்தினாலும் அரச சட்டத்தரணியும் வந்த பிறகு ஒரு விண்ணப்பத்தை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments