புதுக்குடியிருப்பில் நடைபெற்ற விளையாட்டு -இசைநிகழ்சியால் பல நன்மைகள்!


முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பொதுவிளையாட்டு மைதானத்தில் கடந்த 22.04.23 அன்று பகல் விளையாட்டு போட்டியும் இரவ இன்னிசை நிகழ்ச்சியும் பாதுகாப்பு தரப்பின் ஏற்பாட்டில் பாரியளவில் நடத்தப்பட்டுள்ளது இதில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த நன்கொடையாளர்கள் சிலர் அனுசரணை வழங்கியும் உள்ளார்கள்.

இந்த இன்னிசை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுபோட்டியால் மக்களுக்கு பாரிய நன்மைகள் கிடைத்துள்ளன.
நன்மைகளாக..
இலைமறை காயாக இருந்த விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவந்து பெறுமதியான பாரிசில்களை தட்டிச்சொன்றுள்ளார்கள்.

பொழுதுபோக்கு இல்லாமல் நீண்டகாலமாக தவித்திருந்த பல மக்கள் தங்கள்பொழுதினை போக்கிக்கொண்டார்கள்.

வீதிஓர வியாபாரிகள் பலர் மற்றும் ஜஸ் கிறீம் வாகன வியாபாரிகள் பலர் தங்கள் வாழ்வாதாரத்தினை முன்னெடுத்தார்கள்.

பலகாலம் சுத்தம் செய்யப்படாமல் புல்கள் வளர்ந்து காணப்பட்ட பிரதேச சபை விளையாட்டு மைதானம் ஏற்பாட்டாளர்களால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள தனியார் மதுபான சாலையில் பாரியளவிலான வியாபாரம் அன்று இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இளைஞர்கள் மத்தியில் விளையாட்டினை ஊக்கிவித்து அவர்கள் தவறான வழியில் செல்வதை மாற்றியமைப்பதே விளையாட்டின் நோக்கம்..

புதுக்குடியிருப்பில் பல வெளிநாட்டுஅமைப்புக்கள் தொண்டு நிறுவனங்கள் பல இருந்தும் ஏன் இவ்வாறான ஏற்பாட்டினை மக்கள் மத்தியில் முன்னெடுக்கவில்லை என்பது எங்கள் கேள்வி?

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *