வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு புதுக்குடியிருப்பு வர்த்த சங்கமும் ஆதரவு!


வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு புதுக்குடியிருப்பு வர்த்த சங்கமும் ஆதரவு!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் எமது இனத்தின் பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக 25.04.23 அன்று வடக்கு கிழக்கு தழுவிய தாயக பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரும் அனைத்து வணிக நிலையங்களையும் மூடி நாளைய தினம் (25) ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *