புதுக்குடியிருப்பில் மின்னல் தாக்கி தூக்கிவீசப்பட்ட குடும்ப பெண்!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு குரவில் கிராமத்தில் மின்னல் தாக்குதலுக்கு இலங்கான குடும்ப பெண் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 21.03.23 அன்று மாலை புதுக்குடியிருப்பு  உடையார் கட்டு பிரதேசத்தில் கடும் காற்று மற்றும் இடியுடன் மழைபெய்துள்ளது இதன்போது வீட்டில் இருந்த குடும்ப பெண் ஒருவர் வீட்டு வாசலுக்கு வந்தபோது மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி தூக்கிவீசப்பட்டு மயக்கமடைந்த நிலையில் அயலவர்கள் உறவினர்களால் மீட்கப்பட்டு மூங்கிலாறு ஆதாரமருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேச மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

குரவில் பகுதியினை சேர்ந்த 55 அகவையுடைய அம்மாசி வளர்மதி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு பாதிப்புக்கு  உள்ளாகியுள்ளார்.
மகள் ஒருவர் போரில் உயிரிழந்த நிலையில் மகன் ஒருவர் காணாமல் போன நிலையிலும் மிகவும் வறுமையில் வாடிவரும் இந்த குடும்பத்திற்கே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர் 23.04.23 இன்று வீடுதிரும்பியுள்ளார்.

மின்னல் தாக்கத்தில் இருந்து உடல் இன்னும் மீளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன் மின்னல் தாக்கத்தினால் வீட்டில் இருந்த அனைத்து மின்குமிழ் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *