தமிழர்களின் ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்ற காலத்தில் தமிழர்களின் விடுதலைக்காக போராடிய ஒருவராற்று சாதனையாளன் தனது முமையில் இயற்கை எய்தினார்.
இவரை பலருக்கு இன்று தெரியாவிட்டாலும் இந்திய அமைதிப்படைகாலத்தில் விடுதலைக்காக போராடியவர்களுக்கு எல்விற் அண்ணையினை நன்றாக தெரியும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கணுக்கேணி கிழக்கினை பிறப்பிடமாக கொண்ட இவர் தமிழர்களின் விடுதலைக்காக போராட்டம் தொடங்கிய காலத்தில் அணியுடன் இணைந்து கொண்டு தனது விடுலைக்கான பயணத்தினை தொடங்கியவர் இன்று இவர் ஒரு மாவீரனாக மண்ணில் மறைந்துள்ளார்.
22.10.2024 அன்று முறிப்பு பகுதியில் வசித்து வந்த நிலையில் மண்ணைவிட்டு பிரிந்துள்ளார்.
எல்விற் அண்ணா என்றால் தெரியாதவர்கள் அன்று இல்லை இவருக்கு நெருக்கமானவர்தான் கிண்ணி அண்ணா கிண்ணி அண்ணாவுடன் இணைந்து பல வெற்றி தாக்குதல்களை மேற்கொண்டதுடன் இன்னுமொருநாடு என்ற முழு நீளத்திரைப்படத்தில் இவர் நடித்த பெருமைக்குரியவர்.
1984 ஆண்டு தனது சிறு அகவையில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்ட இவர் மணலாறு,மாங்குளம்,முல்லைத்தீவு,பலாலி, என பல களமுனைகளை கண்ட இவர் எல்விற் என்றால் எதிரிப்படைகளை நடுங்க செய்தவர் இவ்வாறு இன்னும் பல இவரது வீர வரலாறுகள் உண்டு இவரை நன்கு அறிந்தவர்கள் பலர் புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்து வருகின்றார்கள் குறிப்பாக இந்திய அமைதிப்படை காலத்தில் களத்தில் நின்று போராடிய வீரனின் மறைவு பல மனங்களின் இன்று நினைவுகளை இந்த வீரமறவனின் நினைவுகளை தாங்கி இந்த பகிர்வினை பகிர்ந்து கொள்கின்றோம்.