Sunday, April 27, 2025
HomeUncategorizedகட்டுக்கரை விவசாயிகளின் சவால்கள் தொடர்பில் வேட்பாளர் ஆராய்வு!

கட்டுக்கரை விவசாயிகளின் சவால்கள் தொடர்பில் வேட்பாளர் ஆராய்வு!

கட்டுக்கரை விவசாயிகளின் சவால்கள் தொடர்பில் வேட்பாளர் ஆராய்வு!
வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிரும் வேட்பாளர் சம்சோன் ஜெறோம் அவர்கள் 25.10.24 இன்று கட்டுக்கரை குளத்தின் கீழான விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து ஆராய்ந்துள்ளார்.

மன்னார் அடம்பன் கன்னாட்டியில் விவசாயிகளுடனான சந்திப்பில் கட்டுக்கரை குளத்திற்கான நீர்வரத்தினை எதிர்காலத்தில் அதிகரிக்க செய்வதன் ஊடாக வறட்சி காலத்தில் சிறுபோக நெற்செய்கையினை ஊக்கிவிக்கும் நோக்கில் குளத்தில் இருந்து விவசாயத்திற்கு எவ்வாறு நீர்;வழங்கவேண்டும் என்பது தொடர்பில் வேட்பாளரால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் முதன்மையான குளமாக கட்டுக்கரை குளம் காணப்படுகின்றது இந்த குளத்தினை நம்பி பல ஆயிரம் விவசாயிகள் விவசாய செய்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள் குளத்திற்கான நீர்வரத்தினை அதிகரிப்பதன் ஊடாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தலாம் என சுயேட்சைக்குழு வேட்பாளர் சம்சோன் ஜெறோம் அவர்கள் எடுத்துரைத்துள்ளதுடன் விவசாயிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை மக்கள் வாழ்இடங்களுக்கு சென்று ஆராயும் வேட்பாளராக சம்சோன் ஜெறோம் காணப்படுகின்றார் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் வாக்குகளை அவருக்கு வழங்கி அவரை வெற்றி வேட்பாளராக பாராளுமன்றம் அனுப்பிவைப்போமாக.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments