Monday, April 28, 2025
HomeUncategorizedரணிலுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் தேர்தலில் இருந்து ஒதுங்கிய வினோ எம்பி!

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் தேர்தலில் இருந்து ஒதுங்கிய வினோ எம்பி!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கிலே மக்கள் மத்தியில்குறிப்பாக சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவைஉணரப்பட்டது. அதன் விளைவுதான் அநுரகுமார திசாநாயக ஜனாதிபதியாகியமை.

அதைப்போலவே வடகிழக்கிலே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களும்மாற்றம் ஒன்றினை எதிர்பார்த்து நிற்கின்றனர். அது புதியவர்களையும், இளையோரையும்
பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என்பதாகும். மக்கள் மனங்களில் ஏற்பட்டிருக்கும் இந்த மன மாற்றத்துக்கு நாம் தடையாக இருக்க முடியாது.

அதற்கு வழிவிடவேண்டியது தவிர்க்க முடியாததாகும். மக்கள் மனங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, ஏற்றுக் கொண்டு இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் இடம் கொடுபதேஅரசியல் கட்சிகளினதும், தலைவர்களினதும் தலையாய கடமையாக இருக்கவேண்டும்.

என்னுடையதும் ஏனைய சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களதும் போட்டியிடாதிருக்கின்ற முடிவு ஏனையவர்களும் உணர்ந்து முடிவெடுக்க உந்துதலாகஅமையும் என கருதுகின்றேன்.

வன்னி மாவட்டத்திலே அரசியல் தெளிவுள்ள, ஆளுமைமிக்க இளம் தலைவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற மக்களின், இளைஞர்களின்விருப்பங்கள் நிறைவேற மக்கள் மனதறிந்து எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில்போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments