கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் டிசம்பரில்!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு மீண்டும் டிசம்பர் 12 ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது

முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி  தொடர்பான வழக்கு விசாரணைக்காக நேற்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணாமல்போனோர் அலுவலகம் (ஓ எம் பி ) சார்பில் அந்த அலுவலகத்தின் சட்டத்தரணிகளும் , சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி V.S.நிரஞ்சன் ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

வழக்கின் பின்னர்  சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில்

”இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குதொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக  எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதுவரை காலமும் மனித புதைகளில் இருந்தும் எடுக்கப்பட்ட மற்றும் மனித எலும்பு கூட்டு தொகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட இலக்க தகடு சம்பந்தமான முழு விபரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது 

இதேவேளை, அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

மேலும் இதுவரை காலமும் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 20 வரையான எலும்புக்கூடுகள் முற்றாக பகுப்பாய்வுக்கு உட்பட்ட நிலையில் மிகுதி எலும்புக்கூடுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனமேலும் இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி தவணையிடப்படுள்ளது.”. எனக் கூறியுள்ளார்

Admin Avatar

More for you