இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து இலங்கையினை கண்காணிக்கும் நடவடிக்கையில் தேர்தல் தொடர்பிலான கண்காணிப்புக்களை புலனாய்வு செய்யும் பணிகளில் மூன்று நாடுகளின் உளவு அமைப்புக்கள் களம் இறங்கியுள்ளன.
குறிப்பாக இந்தியா,சீனா,அமெரிக்கா போன்ற நாடுகளின் உளவு பிரிவினர் இலங்கையில் ஐனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் பரப்புரைகளை கண்காணித்து மக்களின் நிலமை தொடர்பில் அவர்கள் நாடுகளுக்கு தெரியப்படுத்தி வருகின்றார்கள்.
ஐனாதிபதி வேட்பாளர்களான,ரணில்விக்கிரமசிங்க,அனுரகுமாரதிஸ்நாயக்க,நாமல்றாஜபக்ச,சஜித் பிரேமதாச ஆகிய நான்கு வேட்பாளர்களின் தேர்தர் பரப்புரை கூட்டங்களில் குறித்த நாடுகளின் உளவு அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தகவல் திரட்டி அந்தந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை மக்கள் ஐனாதிபதியினை தீர்மானிப்பதற்கு முன்னர் குறித்த மூன்று நாடுகளுக்கும் தெரியும் யார் இலங்கையின் ஐனாதிபதி என்று என அந்தளவிற்கு மூன்று நாடுகளின் உளவு அமைப்பின் வேலைகள் இலங்கையில் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது