இலங்கையின் தேர்தல் புரப்புரை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு தொடக்கம் நிறுத்தப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெற உள்ளதற்கு முதல் இருக்கும் 48 மணி நேரங்களுக்கு முன்னர் தேர்தல் பரப்புரைகள் நிறுத்தப்படவேண்டும் பொது அமைதி காலப்பகுதி என அறிவிக்கப்பட்டு இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த காலப்பகுதியில் இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்படலாம்
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொலைத்தொடர்பு நிறுவனங்களுகடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது
பொதுஅமைதி காலப்பகுதியில் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிநாடுகளில் இருந்து பரப்புரைகள் மேற்கொள்ளப்படலாம் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.