புதுக்குடியிருப்பில் சஜித்தின் வெற்றிக்கான வீதியில் இறங்கிய மனோகணேசன்!

ஐக்கிய மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரை அலுவலகத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் திறந்துவைத்துள்ளார்!  

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரை அலுவலகத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் திறந்துவைத்துள்ளார்!

ஐக்கிய மக்கள் சத்தியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்றாவது ஐனாதிபதி தேர்தல் அலுவலகம் இன்று (02.09.2024) புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பர் முத்துச்சாமி லக்சிகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கொழும்பு மாவட்ட நாடாளுனமற் உறுப்பினர் மனோகணேசன் அவர்கள் கலந்துகொண்டு அலுவலகத்தினை திறந்துவைத்துள்ளார்.

கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்கள்.

அலுவலத்தினை திறந்துவைத்த பின்னர் அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் முத்துச்சாமி லக்சிகன் அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் ஆகியோர் உரை நிகழ்த்தியுள்ளார்கள்.

தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதிக்கு சென்ற மனோகணேசன் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் பரப்புரை குழுவினர் ஐனாதிபதி  சஜீத் பிரேமதாசாவிற்கு ஆதரவு தெரிவித்து வணிக நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்கள்.

Admin Avatar

More for you